பட்டர் சிக்கன் சாப்பிட்ட 84 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

2238பார்த்தது
பட்டர் சிக்கன் சாப்பிட்ட 84 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
கேரளாவின் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மகளிர் விடுதியில் பட்டர் சிக்கன் சாப்பிட்ட 84 மருத்துவ மாணவிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாணவிகள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். வியாழக்கிழமை பரிமாறப்பட்ட பட்டர் சிக்கன் மாணவிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை உணவு மற்றும் நீர் மாதிரிகளைச் சேகரித்து சோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி