திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெறவுள்ள நிலையில், முதலாவதாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்.15 முதல் 23-ம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. செப்.15 மாலை கருட கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழாவில் தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் ஸ்ரீவாரி வாகன வீதிஉலாக்களும், செப்.19 அன்று சிகர நிகழ்வான கருட சேவையும் நடைபெறவுள்ளன. தொடர்ந்து அக்.12 முதல் 20-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.