'மாயாவி' பட துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணன் (73) கொடைக்கானலில் உள்ள அவரது பங்களாவில் அண்மையில் கொலை செய்யப்பட்டார். சுற்றுலாப் பயணிகள் போல் வந்த 5 பேர், ஊழியர்களைத் தாக்கி, சூரிய நாராயணனை டேப்பால் கட்டி மூச்சுத்திணறடித்து கொலை செய்து, நகை, பணத்தைத் திருடிச் சென்றனர். இந்த வழக்கில் சென்னை, அரக்கோணம், திருவள்ளூரைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மோசடி மற்றும் ஹவாலா கும்பலைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.