98.42% ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டது: ஆர்பிஐ தகவல்

7283பார்த்தது
98.42% ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டது: ஆர்பிஐ தகவல்
இந்திய ரிசர்வ் வங்கி மே 19, 2023 அன்று ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதன்படி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகளில், ஜனவரி 31, 2026 நிலவரப்படி ரூ.5,609 கோடி மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் 98.42% நோட்டுகள் திரும்ப வந்துள்ளன. அக்டோபர் 7, 2023 முதல் நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி கிளைகளில் ரூ.2,000 நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த அல்லது மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. அஞ்சல் வழியாக அனுப்பப்படும் நோட்டுகளும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி