கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே துரைசாமி கொட்டாய் கிராமத்தில் நள்ளிரவில் மர்மமான கருப்பு உருவம் பறந்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப நாட்களாக அந்த கிராமத்தில் அமானுஷ்ய சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான இடங்களில் சிசிடிவி காட்சிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதில் இந்த உருவம் தெரிந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.