பீகார்: கொலை வழக்கில் சிறையில் இருந்த ஐக்கிய தனதா தள வேட்பாளர் ஒருவர் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனந்த் குமார் சிங் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.