மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படாத நிலையில்,
திமுக ஐடி விங் தமிழக அரசை விமர்சித்துள்ளது. "தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவைத் தொகுப்பா?" என கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், கர்நாடகா சென்றுள்ள முதல்வர்
விஜய் காவிரி நீரை பெற்றுத் தருவாரா என்றும் விமர்சித்துள்ளனர். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே நாளில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாகவும், தற்போது போதிய நீர் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி: நியூஸ்18