சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் சோகம்

25பார்த்தது
சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் சோகம்
விருதுநகர்" சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (84) (ஊறுகாய் வியாபாரி) நேற்று அதிகாலை (ஜன., 01) காலமானார். கணவர் இறந்த துக்கத்தில் அவரது மனைவி லட்சுமி (76), அவரது உடலருகே அழுது கொண்டிருந்தார். இறுதிச்சடங்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, லட்சுமியும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் உடல்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர். புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி