மத்தியில்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
பாஜக அரசு, தனது அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைப்பதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஜூன் 15-ஆம் தேதி வாக்கில் இந்த மாற்றம் அரங்கேற உள்ளது. செயல்திறன் குறைபாடு மற்றும் வரவிருக்கும் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் சுமார் 12 அமைச்சர்கள் வரை பதவியிலிருந்து நீக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.