கங்கை நதியின் சீற்றமான நீரோட்டத்தில் சிக்கி தவித்த நாய் ஒன்றை, படகு வீரர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பாறையில் இறங்கி மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாறையின் இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய அந்த வாயில்லா ஜீவனை, மிக சரியான நேரத்தில் வீரத்துடன் மீட்ட அந்த படகு ஓட்டியின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்தும் இந்த மீட்பு பணி சமூக வலைதளங்களில் பலரது மனங்களையும் நெகிழ செய்துள்ளது.