சிபிஐ கட்சியிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்?

1பார்த்தது
சிபிஐ கட்சியிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்?
ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க கோரி சிபிஐ கட்சிக்கு தவெக கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், தேமுதிக, விசிகவின் ஆதரவை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அந்தந்த கட்சி தலைமைகள் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்தவுள்ளன. 118 இடங்கள் பெரும்பான்மையை இரு வாரங்களில் நிரூபிப்பதாக தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி