ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் நிலவும் வறட்சியால் உணவு தேடி யானைகள் ஊடுருவி வருகின்றன. கர்நாடகாவிலிருந்து சத்தியமங்கலத்திற்கு வரும் லாரிகள், இரும்பு தடுப்பில் தட்டாமல் இருக்கச் சாலையோரம் வீசிச் செல்லும் கரும்புகளை யானைகள் தொடர்ந்து ருசித்து வருகின்றன. இந்நிலையில், ஒற்றை யானை ஒன்று கரும்பைத் தூக்கிக்கொண்டு சாலையில் ஓடிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறை எச்சரித்துள்ளது.