வனத்துறையினரை துரத்திய ஒற்றை யானை

1972பார்த்தது
வனத்துறையினரை துரத்திய ஒற்றை யானை
வேலூர் பேரணாம்பட்டு வனச்சரகத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை ஆண் யானை, கோட்டையூர் கிராமத்தில் சோலார் கேமராவை சேதப்படுத்தியதுடன், விவசாய நிலங்களையும் நாசம் செய்தது. நேற்று முன்தினம் இரவு பத்தலப்பல்லி கிராமத்தில் வீட்டின் கூரையை பிடுங்கி, நெல், அரிசி, வாழை மரங்களையும் சேதப்படுத்தியது. வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் விரட்ட முயன்றபோது, யானை அவர்களை துரத்தியது. வன ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் பட்டாசு வெடித்து சுமார் 4 கி.மீ தூரம் தபால்சாவடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

தொடர்புடைய செய்தி