வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

2பார்த்தது
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்கரையிலிருந்து தென்மேற்கு வங்கக்கடலில் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு - வடமேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் நாளை (நவ.16) முதல் மழை பெய்ய வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நாளை இரவு அல்லது நாளை மறுநாள் (நவ.17) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி