காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சில மணி நேரங்களில் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் வழியாக முற்றிலுமாக கரையை கடந்துவிடும் என கூறியுள்ள அவர், இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக பல்வேறு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.