தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று (பிப்.12) லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (பிப்.13) லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.