அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 'டெத் வேலி' எனப்படும் மிக வெப்பமான பாலைவனம், தற்போது வண்ணமயமான பூக்களின் கூடாரமாக மாறியுள்ளது. 2026-ன் தொடக்கத்தில் பெய்த இதமான குளிர்கால மழையால், பல தசாப்தங்களாக நிலத்தடியில் உறங்கிக்கொண்டிருந்த விதைகள் தற்போது முளைத்து பூக்க தொடங்கியுள்ளன. 'சூப்பர்ப்ளூம்' என்று அழைக்கப்படும் இந்த அரிய நிகழ்வு, வறண்ட பாலைவனத்தை பல்லாயிரக்கணக்கான பூக்கள் நிறைந்த பூஞ்சோலையாக மாற்றியுள்ளது.