பாமகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி குரு. இவரது மகள் விருதாம்பிகை தற்போது ‘ஜெ.குரு பட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரில், புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இன்று (ஜன., 10) கட்சியை தொடங்கியுள்ள அவர், கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். ராமதாஸ், அன்புமணி மோதலால் பிரிந்து நிற்கும் நிர்வாகிகள், ஆதரவாளர்களை குறிவைத்து விருதாம்பிக்கை கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.