முன்னாள் மனைவியின் பூனைக்கு ஜீவனாம்சம் வழங்கும் நபர்

3பார்த்தது
முன்னாள் மனைவியின் பூனைக்கு ஜீவனாம்சம் வழங்கும் நபர்
துருக்கியில் கணவர் ஒருவர் தனது முன்னாள் மனைவியின் இரண்டு பூனைகளை பராமரிப்பதற்காக பெரிய தொகையை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். துருக்கிய ஊடகங்களின்படி, அந்த நபர் ஒவ்வொரு காலாண்டிலும் 10,000 துருக்கிய லிராக்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,000) செலுத்த ஒப்புக்கொண்டார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் ஆண்டுதோறும் மொத்தம் ரூ.84,000 அளிக்க உள்ளார். இந்த தீர்ப்பு, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.