அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று (ஏப்.10) பரப்புரை செய்து அவர் பேசியதாவது, “தமிழ் மக்களின் பிரச்னைகளை பேசுகின்ற இடம் சட்டமன்றம். அங்கு மெஜாரிட்டியை நிரூபிக்கும்போது திமுகவினர் செய்தது கொஞ்ச நஞ்சமா? எட்டப்பனாக இருந்த ஒருவர் எதிரிகளோடு சேர்ந்து எதிராக வாக்களித்தார்” என மறைமுகமாக ஓபிஎஸ்-ஐ சாடினார். மேலும், “அண்ணா, எம்ஜிஆர் மறைந்தாலும் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறி உள்ளது” என்றார்.