கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உணவகத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவரின் தொண்டையில் முட்டை துண்டு சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது அவரது நண்பர் உடனடியாக செயல்பட்டு அவரது முதுகில் தட்டி சரியான நேரத்தில் உயிரை காப்பாற்றினார். நண்பனின் சமயோஜித முயற்சியால் உயிர்தப்பிய இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.