162 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு.. போராடி விமானத்தை தரையிறக்கிய விமானி

4303பார்த்தது
162 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு.. போராடி விமானத்தை தரையிறக்கிய விமானி
திருச்சியில் இருந்து 162 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நடுவழியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமானி திருச்சி மாவட்டத்தை சுற்றியபடி விமானத்தை இயக்கி சிறிது நேரம் போராடினார். சில மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதனால், 162 பயணிகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.