ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், 6 வாரங்களில் சுமார் 20 பேரை அணில் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. சைக்காலஜி துறைக்கு செல்லும் வழியில் பதுங்கியிருக்கும் அணில், அவ்வழியாக வருவோர் போவோரை துரத்தி துரத்தி கடிக்கிறதாம். வெறிப்பிடித்த அணிலை கூண்டு வைத்து பிடிக்க பல்கலை., நிர்வாக ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.