சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று (ஜன.03) மார்கழி ஆருத்ரா தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் சிலர், தரிசனத்திற்காக ஒருசில பக்தர்களை குறுக்கு வழியில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த மற்ற பக்தர்கள், அதிருப்தியடைந்த நிலையில், கூச்சலிட்டனர். இதனை கவனித்த போலீசார் அங்கிருந்த தீட்சிதர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.