‘இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியமைக்கும்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (டிச.2) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தவெகவுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனனிடம் சென்றது போல, சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்கு தோல்வி தான் கிடைக்கும். என்ன பிரச்சனை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம்” என்றார்.