தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று (நவ.22) உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. நாளை (நவ.24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வருகிற 26 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.