“தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதில், “இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.