தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச்.2) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், செங்கல்பட்டு மாவதத்தில் தனது தாய் காலமான செய்தி கேட்டு நிலைகுலைந்த மாணவி ஒருவர், பெரும் துயரத்திலும் கண்ணீருடன் வந்து தேர்வு எழுதிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ஈடுசெய்ய முடியாத இந்த தனிப்பட்ட இழப்பையும் மீறி, தனது எதிர்காலத்திற்காக துணிச்சலுடன் தேர்வு மையத்திற்கு வந்த அந்த மாணவியின் மன உறுதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.