தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் படையெடுத்துள்ளனர். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய நுழைவாயிலான பெருங்களத்தூர் மற்றும் GST சாலை வழியாக கடுமையான நெரிசல் ஏற்படுள்ளது. முக்கியமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்த்துள்ளது. தீபாவளிப் பண்டிகையையொட்டி இன்று (அக்.17) சென்னையிலிருந்து 761 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.