காஷ்மீரின் சாம்பா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், இந்திய ராணுவ அதிகாரி சுர்ஜித் சிங் வீரமரணம் அடைந்தார். தாய்நாட்டை பாதுகாக்கும் பணியில் குண்டுகள் துளைத்து உயிர்நீத்த அவரின் உடலை கண்டு, அவரது ஒட்டுமொத்த கிராமமே கண்ணீர் கடலில் மூழ்கியது. அவரது தியாகத்தை போற்றும் வகையில், குண்டுகள் முழங்க முழு அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.