தொழில்நுட்பக் கோளாறு வானத்தில் வட்டமடிக்கும் விமானம்

4642பார்த்தது
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை தரையிறக்க முயற்சி செய்து வருகின்றனர். மாலை 5.40 மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டமடிக்கிறது. விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் 141 பயணிகள் உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி: SUN NEWS
Job Suitcase

Jobs near you