சட்டப்பேரவையில் வைத்து ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், "ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ பேச்சு அதிமுக தொண்டர்களை காயப்படுத்தியுள்ளது. திமுகவை வலுவாக எதிர்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஓபிஎஸ் இதுவரை பசுந்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கிறார்" என விமர்சித்துள்ளார்.