வில்லிவாக்கம் தொகுதியில் தவெக ஆதவ் அர்ஜுனாவை எதிர்கொள்ள,
திமுக தனது வலுவான கூட்டணி படைகளுடன் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. கடந்த காலங்களில்
அஇஅதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஜே.சி.டி. பிரபாகரனின் ஆதரவு வாக்குகள், தொகுதி மாற்றத்தால் ஆதவ் அர்ஜுனாவுக்குக் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதேசமயம், ஆளுங்கட்சியின் திட்டங்கள் மற்றும் விசிக, இடதுசாரிகளின் கட்டமைப்பு ரீதியான பலம் ஆகியவை திமுகவின் வெற்றிக்கான வாய்ப்புகளைத் தற்போது அதிகரித்துள்ளன.