இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபல ரவுடி வெட்டிக் கொலை

3பார்த்தது
இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபல ரவுடி வெட்டிக் கொலை
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று (நவ்.3) இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பிரபல ரவுடி சாம் பிரபாகர் (36) என்பவரை, மர்ம கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சாம் பிரபாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி