உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இன்கிலா தேவி என்ற பெண் பானி பூரி சாப்பிட சென்றுள்ளார். அப்போது தனது வாயின் அளவை விட பெரிதான பூரியை சாப்பிட அளவுக்கு அதிகமாக வாயை திறந்துள்ளார். இதனால் அவரது தாடை மீண்டும் மூட முடியாத அளவுக்கு சிக்கிக்கொண்டது. இதனால் அவர் மிகவும் அவதியுற்றார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் தாடையை பழைய நிலைக்கு கொண்டு வர மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.