முதலமைச்சர் குறித்துப் பேசியது தொடர்பாக விளக்கம் அளித்த விளாத்திகுளம்
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், "நீங்கள் முதல்வரை இந்த அளவிற்குப் பேசியிருக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட அனைவரும் எனக்கு அறிவுரை வழங்கினர். அவையின் கதவு பூட்டப்படும் என்று கூறியபோது அறியாமல் வந்த வார்த்தைகளை, தயவுசெய்து மறந்துவிட வேண்டும்" என மன்னிப்பு கோரும் வகையில் பேரவையில் பேசினார்.