ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அபினாஷ் பிஜுலி என்பவர், தொண்டையில் உயிருள்ள மீன் சிக்கியதால் உயிரிழந்தார். தான் பிடித்த மீன் நழுவி விடாமல் இருக்க அதனை அவர் வாயில் கவ்வியுள்ளார். அப்போது, அந்த மீன் எதிர்பாராதவிதமாக தொண்டைக்குள் ஆழமாகச் சென்று மூச்சுக்குழாயில் சிக்கிக்கொண்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.