தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மொராபெல்லி அருகே காரில் சென்றுகொண்டே மொபைலில்
ஐபிஎல் இறுதிப்போட்டியைப் பார்த்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிய அருண் என்ற இளைஞர் கிணற்றுக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த நிவேஷ், அஸ்வின் ஆகிய இருவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் காரும், அருணின் உடலும் மீட்கப்பட்டன.