ஆடி அமாவாசை: ஆகஸ்ட் 12-ல் கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை!

10பார்த்தது
ஆடி அமாவாசை: ஆகஸ்ட் 12-ல் கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை!
ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். ஆடி அமாவாசையன்று கன்னியாகுமரி கடற்கரை மற்றும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் பக்தர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இதனையொட்டி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி