ஆடி மாத அம்மன் கோயில் சிறப்பு சுற்றுலா: முன்பதிவு தொடக்கம்

39பார்த்தது
ஆடி மாத அம்மன் கோயில் சிறப்பு சுற்றுலா: முன்பதிவு தொடக்கம்
வரவிருக்கும் ஆடி மாதத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசிக்க ஒருநாள் சிறப்பு சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்மீக பயணம் ஆடி மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளதால், இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள் www.ttdconline.com என்ற இணையதள முகவரியின் மூலம் தங்களது பயணத்தை எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி