2027 கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் என்றும், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் அது பாஜகவுக்கு நேரடியாக எம்எல்ஏக்களை வழங்குவது போல் ஆகிவிடும் எனவும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.