தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பல விருதுகளை குவித்த 'ஆரண்ய காண்டம்' திரைப்படம், வரும் மார்ச் 13-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2010-இல் வெளியான போது வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், காலப்போக்கில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தற்போது 'திங்க் ஸ்டூடியோஸ்' நிறுவனத்தால் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.