ஈரோட்டில் தொடர்ந்து ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். காலையில் சிறிது நேரம் தாமதமாகச் சென்றாலும் ஆவின் பால் கிடைப்பதில்லை என மக்கள் வேதனை தெரிவித்தனர். இதனால், ஆவின் பால் கிடைக்காமல் கூடுதல் விலைக்கு தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். தினசரி தேவையான பால் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும், தட்டுப்பாட்டை போக்க ஆவின் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.