ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான 'ராஜா சிவாஜி' திரைப்படம், வெளியான 4 வாரங்களில் உலகளவில் ரூ.101 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மராத்தி, இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் அபிஷேக் பச்சன் முதன்முறையாக மராத்தி திரையுலகில் தடம் பதித்துள்ளதோடு,
சஞ்சய் தத், ஜெனிலியா, வித்யா பாலன் உள்ளிட்டோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.