கடலூர் மாவட்டம் அருகே தனியார் பேருந்தும், வேனும் மோதிய விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். வடலூர் என்னும் பகுதியில் சாலையில் வேகமாக சென்ற தனியார் பேருந்து ஒன்று வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், 25 பெண்கள் உள்பட 30 பேர் படுகாயமடைந்துளனர். இந்த விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த ஏரியில் வாகனங்கள் கவிழாமல் இருந்ததால், நூலிழையில் வேனில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.