விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.5) அதிகாலை சிறுத்தை ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுவரை சிறுத்தையே தென்படாத இப்பகுதியில் திடீரென சிறுத்தை பலியானது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.