கிரீஸ் நாட்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக பயணம் மேற்கொண்ட அகதிகளின் படகு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். கிரீட் தீவின் தெற்கு கடற்கரை அருகே, சரக்கு கப்பலில் ஏற முயன்றபோது படகு கவிழ்ந்ததில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. அப்போது படகில் 50 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் 20 பேர் காணாமல் போன நிலையில், சரக்கு கப்பல் மூலம் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.