உரிய அனுமதியின்றி செயல்படும் அங்கீகாரமில்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது குற்றவியல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தமிழக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சில நிறுவனங்கள் போலி அங்கீகாரத்துடன் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கான புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.