சாதி மற்றும் வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடம் ஏற்படுத்தும் ஆசிரியர்களைப் பணி இடமாற்றம் செய்ய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மாணவர்களின் சாதி தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். ஸ்காலர்ஷிப்பிற்காக மாணவர்களைச் சேர்க்கும்போதும் தொகையை வழங்கும்போதும் அவர்களைத் தனித்தனியாக HM அலுவலகத்திற்கு அழைத்து விவரம் தெரிவிக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.