திருப்பத்தூர் அருகே அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் நோயாளிக்கு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தகுதியற்ற நபர்களை கொண்டு சிகிச்சை அளித்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும், புறநோயாளிகள் பிரிவில் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், உள்நோயாளிகள் பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்களும் செவிலியர்களும் சுழற்சி முறையில் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.